a

கிறுக்குப்பய

இரண்டு தினம் முன்பு நானும் என் நண்பர் விஜயும் பைக்கில் shenoy நகர் சாலையில் சென்று கொண்டு இருந்தோம். சற்றும் எதிர்பாராத நேரத்தில் முன் சென்று கொண்டிருந்த பல வண்டிகள் நிக்கவே, கட்டு பாட்டை இழந்த என் நண்பர் முன் நின்ற ஒரு இருசக்கர வாகனத்தின் பின் எங்கள் வண்டியை இடித்தார். அந்த வண்டியின் ஓட்டுனர் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போல் அலட்டிகொள்ளாமல் இருந்துவிட்டார். என் நண்பரோ இடித்ததும் இல்லாமல் அவரை "கிறுக்குப்பய" என திட்டினார் ! அதையும் அவர் கவனித்தாற்போல் தெரியவில்லை.

தவறு எங்களுடையது என்பதால் என் நண்பரிடம் "ஏன் இவ்வாறு திட்டுகிறாய்" என கேட்டேன் . அதற்க்கு நண்பர் சொன்ன பதில்

"இடித்தது கூட தெரியாமல் நிக்கறான் பார் கிறுக்குப்பய"

0 people have left comments

Commentors on this Post-